About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Tuesday, April 26, 2011

பெண்கள்....

அழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ’ குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், `பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்’ என்று கண்டுபிடித்துள்ளார்.


இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்…:)

பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிட்டும் உண்மை!

ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர்.

பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது’ என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி `சீப்’பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது’ என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது’ என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்து வதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment