About Me
- Jeyaganesh
- Tirunelveli/Chennai, TamilNadu, India
- நான் நானாக இருகிறேன்.....!
Tuesday, April 26, 2011
பெண்கள் உள்ளுணர்வு...
பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது’ என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.
ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.
பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம். ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்.
மூவாயிரம் பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட பென் கே, “ஆண்களுடன் பழகுவதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அது ஏதோ வெகு ஆழத்திலிருந்து வருவது போலத் தோன்றுகிறது. ஒரு மாயாஜாலம் போல அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது. ஆனால் பெண்கள் மிக விரைவாக முடிவெடுப்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆண் ஒருவனுடன் சேர்ந்து ஒரு பானம் பருகி முடிப்பதற்குள்ளாகவே அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமாக இருப்பானா, இல்லையா என்று பெண் முடிவு செய்துவிடுவது உண்மையிலேயே வியப்பான ஒன்றுதான்!” என்கிறார் திகைப்பாக.
அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment