About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Friday, April 8, 2011

அலெக்சாண்டரும் கடற்கொள்ளைக்காரனும் ....


மாவீன் அலெக்சாண்டர் முன்னே டியோண்ட்ஸ் என்னும் கடற்கொள்ளைக்காரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அலெக்சாண்டர் அவனைப் பார்த்து, “நீ எந்தத் துணிவுடன் நாசவேலைகளைச் செய்துகொண்டு கடலிலே உலவுகிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு டியோண்ட்ஸ், “நீ எந்தத் துணிவின் பேரில் உலகத்தை அடக்கியாள முயல்கிறாய்? என்னிடம் ஒரு கப்பல் இருப்பதினால் நான் ஒரு கொள்ளைக்காரன் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் உன்னிடம் மாபெரும் கப்பற்படை இருப்பதினால் நீ மாவீரன் என்று போற்றப்படுகிறாய்” என்று பதிலளித்தான்.

அலெக்சாண்டர் அதற்குப் பதிலேதும் கூறவில்லை. அவனை விடுதலை செய்துவிட்டான்.

No comments:

Post a Comment