About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Tuesday, April 26, 2011

செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை...


நம் நாட்டில் தற்போது 15 செல்போன் சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நீங்கலாக இதர நிறுவனங்கள், சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் 1.12 கோடி புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் புதிதாக இணைப்புகளைப் பெற்றுள்ளனர். மார்ச் மாதத்தில் புதிய வாடிக்கையாளர்களின் (ஜி.எஸ்.எம்+சி.டீ.எம்.ஏ) மொத்த எண்ணிக்கை 2.03 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான 12 மாதங்களில், இந்திய செல்போன் சேவை நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1.60 கோடி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளன. இந்திய செல்போன் சேவை துறையில் பாரதி ஏர்டெல் நிறுவனம், 30.16 சதவீத சந்தை பங்களிப்பை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 30 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 13.06 கோடியாக உயர்ந்துள்ளது. செல்போன் சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள வோடாபோன் நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் 29 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. தற்போது இந்நிறுவனம் மொத்தம் 10.38 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனம் 15 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. ஏர்செல் நிறுவனம் 16 லட்சம் புதியவர்களைப் பெற்றுள்ளது. தற்போது இந்த நிறுவனங்கள் முறையே 6.53 கோடி மற்றும் 3.85 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளன. ஏர்செல் நிறுவனம் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. சென்ற மாதத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் முறையே 12.50 லட்சம் மற்றும் 33,217 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. பீ.எஸ்.என்.எல். தற்போது 6.47 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. எம்.டி.என்.எல். வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சமாக உள்ளது.

No comments:

Post a Comment