About Me
- Jeyaganesh
- Tirunelveli/Chennai, TamilNadu, India
- நான் நானாக இருகிறேன்.....!
Wednesday, April 6, 2011
இணையத்தில் எந்த நாட்டினர் அதிக நேரம் செலவிடுகின்றனர்!
இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை.
கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது.
தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். இதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.
இந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா! மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது.
மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன. காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர்.
இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன. பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment