About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Saturday, February 18, 2012

திசைகள்- மாற்றங்கள்


சூரியன் தினசரி ஆகாயத்தில் பயணிக்கும் பொழுது அதன் பாதிப்பு நம் மீது இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. காலை வேளையில் சூரிய கதிர்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் வீடோ கட்டிடமோ காலை கதிர்கள் வாசலில் விழும்படியாக கிழக்கு பார்த்து கட்டுதல் மிகவும் அனுகூலமானதாகும். மதிய வேளையில் சூரியனின் தாக்கம் அதிகரிப்பதால் தெற்கு பக்கம் இருக்கும் அறைகளுக்கு சுவர்கள் அடர்த்தியாக இருந்தால் அவை வெப்பத்தை எதிர்த்து அறைகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகியவை முதன்மையான திசைகள் ஆகும். வட கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு மற்றும் தென் மேற்கு ஆகியவை கிளை திசைகள் ஆகும்.

ஒவ்வொரு திசையையும் ஒரு கடவுள் ஆட்சி செய்வதாக நம்பப்படுகிறது. மேலும் ஒவ்வொரு திசையும் ஒரு ஆசை, ஒரு நம்பிக்கை மற்றும் ஒரு தேவையை குறிக்கிறது. அதனால் எல்லா சக்தியையும் உள்ளடக்குவதர்காக வீடு சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருத்தல் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.


வடக்கு:

புதன் கிரகமும் பஞ்ச பூதங்களில் நீரும் வடக்கை ஆட்சி செய்கின்றன. அறிவு, தியானம், உண்மையாயிருத்தல் மற்றும் தொடர்புத்திரன் ஆகியவை இவற்றின் பிரதான பண்புகள் ஆகும்.
இதற்கு ஏற்ற நிறம் - நீலம் மற்றும் வடிவம் - வட்டம்.
வடக்கு திசை குணப்படுத்தும் சக்திகளுடன் தொடர்புடையது. அதனால் மருந்துகளை வடக்கில் வைக்க வேண்டும். மேலும் வடக்கு நோக்கி மருந்து உண்ண வேண்டும். கொத்தமல்லி, இஞ்சி, கத்தாழை போன்ற மருத்துவ குணங்கள் உடைய செடிகளை தோட்டத்தின் வடக்கு பக்கம் வைத்தல் நன்று.

செல்வத்தின் அதிபதியான குபேரன் வடக்கை ஆட்சி செய்கிறார். அதனால் பணம், நகைகள் மற்றும் முக்கியமான பத்திரங்களை இங்கு வைக்கலாம்.

வடக்கு நோக்கி வேலை செய்தால் அது ஒரு காரியத்தின் வெற்றிக்கு உதவும். வட மேற்கை சந்திர கிரகம் ஆட்சி செய்கிறது. வெள்ளை நிறம் இதற்கு ஏற்றது. இடப்பெயர்ச்சி, செயல்திறன் மற்றும் அமைதியின்மை இதன் பண்புகளாகும். காற்றின் கடவுளான வாயு பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். இத்திசை பொது உறவுகளையும் பொருளாதார நிலைகளையும் ஆட்சி செய்கிறது. ஆதலால் இது வியாபாரங்களுக்கு ஏற்ற திசையாகும்.

வட கிழக்கு:

கடவுள்களின் வாசல் என்றழைக்கப்படும் வடகிழக்கு திசை அண்டத்தின் நிறைவான சக்திகளுக்கெல்லாம் மூலாதாரம் ஆகும். அறிவு, தியானம் மற்றும் ஆன்மிக விவேகம் போன்ற பண்புகளை உடைய வியாழ கிரகம் இதை ஆட்சி செய்கிறது.
இப்பகுதியில் அடுப்படி, சாமான் அரை மற்றும் குளியலறை இல்லாமல் இருத்தல் நல்லது.
இதன் கடவுள் - ஈசானா(சுத்தத்தின் கடவுள்),
நிறம் - கருப்பு.

தெற்கு:

பஞ்ச பூதங்களில் நிலம்மும், நிறங்களில் மஞ்சளும், வடிவங்களில் சதுரமும் தெற்குக்குடையவை. வாசனை, சத்தம், ருசி மற்றும் தோடு உணர்ச்சி இதன் பண்புகளாகும்.
கோள்களில் செவ்வயாலும், கடவுள்களில் எமனாலும் இது ஆட்சி செய்யப்படுகிறது. புனிதமான காரியங்களுக்கு கிளம்பும் பொது தெற்கு நோக்கி ஆரம்பிக்க கூடாது.

தென் கிழக்கு:

தென் கிழக்கு வெள்ளி கிரகத்தால் ஆட்சி செய்யப் படுகிறது. இது பெண்மை தன்மை உடையது. மேலும் இது காதல், பேரார்வம் மற்றும் உறவுகுடன் தொடர்புடையது. இது ஒழுக்கம் மற்றும் தனித்தன்மையை அதிகரிக்கும். நெருப்பின் கடவுளான அக்னி பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.

தென் மேற்கு:

தென் மேற்கு திசை நமது முன்னோர்களுடன் தொடர்புடையது. இங்கு ஆட்சி செய்யும் கோள் - யுரேனஸ், கடவுள் - நிரிடி(துன்பத்தின் கடவுள்). இங்கு அச்சம் அதிகரித்து காணப்படும். இந்த திசையுடன் தொடர்புடைய
நிறம் - கருப்பு.

மேற்கு:

பஞ்ச பூதங்களில் காற்றுடனும், நிறங்களில் கருப்புடனும் தொடர்புடைய திசை மேற்கு.
பொறாமை, ஏழ்மை, கடன், புகழ் மற்றும் நீடித்து வாழல் போன்ற குணங்களுடன் தொடர்புடைய சனிகிரகம் இங்கு ஆட்சி செய்கிறது.
நீர், மழை, ஆறுகள் மற்றும் கடல்களின் கடவுளான வருண பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.

நீருக்கு அடியில் உள்ள எல்லா தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை வருண பகவானுக்கு உண்டு என்று நம்பப்படுகிறது.
மேற்கு திசை மழைக்கும் செல்வ செழிப்புக்கும் தொடர்புடையது.

கிழக்கு:

பஞ்ச பூதங்களில் நெருப்பும், நிறங்களில் சிவப்பும், வடிவங்களில் முக்கோணமும் கிழக்கு திசைக்கு ஏற்றது. இன்றியமையாத சக்திகளுக்கெல்லாம் மூலாதாரமான சூரிய பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். எல்லா சக்திகளின் கடவுளான இந்திரனும் இங்கு ஆட்சி செய்கிறார்.
கிழக்கு திசை செல்வம், சந்தோஷம் மற்றும் புகழுடன் தொடர்புடையது.

மேலும் இது வாழ்கையை பேணி பாதுகாப்பும் வளமும் தரும் என்று நம்பப்படுகிறது.
கிழக்கு நோக்கி முக்கியமான வேலைகளை செய்தல் சூரிய பகவானின் அருளை பெற்று தரும். சாமி கும்பிடும் போதும், தியானம் செய்யும் போதும் கிழக்கு நோக்கி செய்ய வேண்டும். உறங்கும் பொது தலை கிழக்கு பக்கம் இருத்தல் நல்லது.

No comments:

Post a Comment