About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Saturday, February 18, 2012

தேனீக்கள்..!



தேன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்! எகிப்தில், பிரமிடுகளைத் தோண்டியபோது, ஒரு தேன் ஜாடி கண்டெடுக்கப்பட்டது. அது 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆனாலும் அது இன்னும் நல்ல நிலையில் இருக்கிறது!



சின்னஞ்சிறு தேனீயினால் ஓரிடத்திலும் நிற்காமல், தொடர்ச்சியாக 11 கி.மீ.தூரம் பறக்க முடியும்! அது பறக்கும்போது, ஒரு நிமிடத்துக்கு 26,400 தடவைகள் தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளுகிறது.




தேனீக்கள், பூக்களை நோக்கிப் பறக்கும்போது ஒரே நேர்கோட்டில் பறக்கின்றன. ஒரே நேர்க்கோட்டில் செல்லும் சூரியனின் கதிர்களை உணரக்கூடிய சக்தி தேனீக்களுக்கு உண்டு. இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் ‘கார்ல்வான் ஃபிரிஸ்ச்’ என்ற விஞ்ஞானி.



தேனீக்கள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பறக்கின்றன. இதே வேகத்தில் அது பறந்தால் 25 நாட்களில் உலகத்தையே ஒரு சுற்று சுற்றிவிடும்!



தேனீக்கள் எந்த நேரத்திலும் தூங்குவதேயில்லை! இரவானாலும் சரி; பகலானாலும் சரி!







ஒரு ராணித் தேனீ தினமும் சராசரியாக 2500 முட்டைகள் இடக்கூடியது! இது, ஒரு கோழி தினமும் 50 முட்டைகள் இடுவதற்குச் சமம்!



தன் கொடுக்கினால் கொட்டிய தேனீ கொடுக்கை இழந்து விடும். அதனால் அந்தத் தேனீ விரைவில் இறந்துவிடும்!

தேனீக்களின் ஆயுட்காலம் சுமார் 2 மாதங்கள். ராணித் தேனீயின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள்!



நாக்கினாலும், உணர்கொம்பினாலும், கால்களாலும்கூட தேனியினால் ருசிபார்க்க முடியும்!





தேனடைகள் கட்டப் பயன்படும் மெழுகு, தேனீக்களின் உடலிலேயே சுரக்கிறது!



ஒரு தேனீ 1 கிலோ எடையுள்ள தேனைச் சேகரிக்க வேண்டுமானால் அது 50 லட்சம் பூக்களில் அமர வேண்டும்! இதற்காக 1.5 லட்சம் தடவைகள் அது பறந்து போக வேண்டும்!



ஒரு தேனீ, பகல் முழுவதும் வெளியில் பறந்து சென்று விட்டுத் தன்னுடைய கூட்டுக்குத் திரும்பும்போது அதனிடம் சுமார் 40 மி.கிராம் தேன் இருக்கும். இது, தேனீயின் எடையில் பாதி!



தேனீயின் கண்கள் மிகவும் விசித்திரமானவை. புதிதாக மலர்ந்த மலர்களை மட்டுமே அதன் கண்கள் பார்க்கின்றன. வாடிய மலர்களை அல்லது மலராத மொட்டுக்களை அதனால் பார்க்க முடியாது!



தேனீக்கு மிக நுண்ணிய 5000 மூக்குத் துளைகள் இருக்கின்றன. 750 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு பூவின் மணத்தைக் கூட அதனால் நுகர முடியும்!



ஒரு தடவை, தேனீக்கள் போதிய அளவு இல்லாததால் மகரந்த சேர்க்கை குறைந்து, அதனால் பழ உற்பத்தியும் குறைந்து விட்டது என்று ஜப்பான், தேனீக்களை லண்டனிலிருந்து வரவழைத்துத் தன் நாட்டில் பறக்க விட்டது! அதன்பிறகு, ஜப்பானில் பழ உற்பத்தி அமோகமாக இருந்தது!



தேன் தித்திக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்! ஆனால், மலேசியாவில் கிடைக்கும் தேன் கசக்கும்! அங்கே அதிகம் வளரும் ரப்பர் மரங்களின் பூக்கள் கசப்பானவை. அதனால் அந்தப் பூக்களிலிருந்து கிடைக்கும் தேனும் கசக்கும்!



தேனீ விஷத்தைக் கொண்டு, சரும வியாதிகள், கீல்வாத ஜுரம், நரம்பு அழற்சி முதலிய வியாதிகளைக் குணப்படுத்துகிறார்கள். தேனீ விஷத்தில், மாக்னீஷியம் ஃபாஸ்பேட், கந்தகம் ஆகியவை இருக்கின்றன!



தேன் மிக விரைவில் ஜீரணமாகி, அதன் சத்துப் பொருள்கள் இரத்தத்துடன் கலக்கின்றன. 1 கிலோ தேன், 65 கோழி முட்டைகளுக்குச் சமம்; 10 லிட்டர் பாலுக்குச் சமம்; 8 கிலோ பிளம் பழத்துக்குச் சமம்; 10 கிலோ பச்சைப் பட்டாணிக்குச் சமம்; 20 கிலோ காரட்டுக்குச் சமம்!



புயல் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய சக்தி தேனீக்களுக்கு உண்டு. புயல் வரப்போவதை அறிந்துகொண்டு, தேனீக்கள் கூட்டுக்குத் திரும்பி வந்து விடுகின்றன!



தேனீக்களுக்கு வியாதி வந்தால் மருந்து கொடுத்து குணப்படுத்திவிட முடியும் என்று சோவியத் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்!



தேன்கூட்டில் தேனீக்கு ஏதாவது வியாதி ஏற்பட்டால், அது தானாகவே வேறு இடத்துக்குச் சென்று இறந்து விடும்! அப்படிப் போகாவிட்டால், மற்ற தேனீக்கள் அதை உடனடியாகக் கொன்று அப்புறப்படுத்திவிடும்!

No comments:

Post a Comment