About Me
- Jeyaganesh
- Tirunelveli/Chennai, TamilNadu, India
- நான் நானாக இருகிறேன்.....!
Saturday, February 18, 2012
திசைகள்- மாற்றங்கள்
சூரியன் தினசரி ஆகாயத்தில் பயணிக்கும் பொழுது அதன் பாதிப்பு நம் மீது இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. காலை வேளையில் சூரிய கதிர்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் வீடோ கட்டிடமோ காலை கதிர்கள் வாசலில் விழும்படியாக கிழக்கு பார்த்து கட்டுதல் மிகவும் அனுகூலமானதாகும். மதிய வேளையில் சூரியனின் தாக்கம் அதிகரிப்பதால் தெற்கு பக்கம் இருக்கும் அறைகளுக்கு சுவர்கள் அடர்த்தியாக இருந்தால் அவை வெப்பத்தை எதிர்த்து அறைகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகியவை முதன்மையான திசைகள் ஆகும். வட கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு மற்றும் தென் மேற்கு ஆகியவை கிளை திசைகள் ஆகும்.
ஒவ்வொரு திசையையும் ஒரு கடவுள் ஆட்சி செய்வதாக நம்பப்படுகிறது. மேலும் ஒவ்வொரு திசையும் ஒரு ஆசை, ஒரு நம்பிக்கை மற்றும் ஒரு தேவையை குறிக்கிறது. அதனால் எல்லா சக்தியையும் உள்ளடக்குவதர்காக வீடு சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருத்தல் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வடக்கு:
புதன் கிரகமும் பஞ்ச பூதங்களில் நீரும் வடக்கை ஆட்சி செய்கின்றன. அறிவு, தியானம், உண்மையாயிருத்தல் மற்றும் தொடர்புத்திரன் ஆகியவை இவற்றின் பிரதான பண்புகள் ஆகும்.
இதற்கு ஏற்ற நிறம் - நீலம் மற்றும் வடிவம் - வட்டம்.
வடக்கு திசை குணப்படுத்தும் சக்திகளுடன் தொடர்புடையது. அதனால் மருந்துகளை வடக்கில் வைக்க வேண்டும். மேலும் வடக்கு நோக்கி மருந்து உண்ண வேண்டும். கொத்தமல்லி, இஞ்சி, கத்தாழை போன்ற மருத்துவ குணங்கள் உடைய செடிகளை தோட்டத்தின் வடக்கு பக்கம் வைத்தல் நன்று.
செல்வத்தின் அதிபதியான குபேரன் வடக்கை ஆட்சி செய்கிறார். அதனால் பணம், நகைகள் மற்றும் முக்கியமான பத்திரங்களை இங்கு வைக்கலாம்.
வடக்கு நோக்கி வேலை செய்தால் அது ஒரு காரியத்தின் வெற்றிக்கு உதவும். வட மேற்கை சந்திர கிரகம் ஆட்சி செய்கிறது. வெள்ளை நிறம் இதற்கு ஏற்றது. இடப்பெயர்ச்சி, செயல்திறன் மற்றும் அமைதியின்மை இதன் பண்புகளாகும். காற்றின் கடவுளான வாயு பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். இத்திசை பொது உறவுகளையும் பொருளாதார நிலைகளையும் ஆட்சி செய்கிறது. ஆதலால் இது வியாபாரங்களுக்கு ஏற்ற திசையாகும்.
வட கிழக்கு:
கடவுள்களின் வாசல் என்றழைக்கப்படும் வடகிழக்கு திசை அண்டத்தின் நிறைவான சக்திகளுக்கெல்லாம் மூலாதாரம் ஆகும். அறிவு, தியானம் மற்றும் ஆன்மிக விவேகம் போன்ற பண்புகளை உடைய வியாழ கிரகம் இதை ஆட்சி செய்கிறது.
இப்பகுதியில் அடுப்படி, சாமான் அரை மற்றும் குளியலறை இல்லாமல் இருத்தல் நல்லது.
இதன் கடவுள் - ஈசானா(சுத்தத்தின் கடவுள்),
நிறம் - கருப்பு.
தெற்கு:
பஞ்ச பூதங்களில் நிலம்மும், நிறங்களில் மஞ்சளும், வடிவங்களில் சதுரமும் தெற்குக்குடையவை. வாசனை, சத்தம், ருசி மற்றும் தோடு உணர்ச்சி இதன் பண்புகளாகும்.
கோள்களில் செவ்வயாலும், கடவுள்களில் எமனாலும் இது ஆட்சி செய்யப்படுகிறது. புனிதமான காரியங்களுக்கு கிளம்பும் பொது தெற்கு நோக்கி ஆரம்பிக்க கூடாது.
தென் கிழக்கு:
தென் கிழக்கு வெள்ளி கிரகத்தால் ஆட்சி செய்யப் படுகிறது. இது பெண்மை தன்மை உடையது. மேலும் இது காதல், பேரார்வம் மற்றும் உறவுகுடன் தொடர்புடையது. இது ஒழுக்கம் மற்றும் தனித்தன்மையை அதிகரிக்கும். நெருப்பின் கடவுளான அக்னி பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.
தென் மேற்கு:
தென் மேற்கு திசை நமது முன்னோர்களுடன் தொடர்புடையது. இங்கு ஆட்சி செய்யும் கோள் - யுரேனஸ், கடவுள் - நிரிடி(துன்பத்தின் கடவுள்). இங்கு அச்சம் அதிகரித்து காணப்படும். இந்த திசையுடன் தொடர்புடைய
நிறம் - கருப்பு.
மேற்கு:
பஞ்ச பூதங்களில் காற்றுடனும், நிறங்களில் கருப்புடனும் தொடர்புடைய திசை மேற்கு.
பொறாமை, ஏழ்மை, கடன், புகழ் மற்றும் நீடித்து வாழல் போன்ற குணங்களுடன் தொடர்புடைய சனிகிரகம் இங்கு ஆட்சி செய்கிறது.
நீர், மழை, ஆறுகள் மற்றும் கடல்களின் கடவுளான வருண பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.
நீருக்கு அடியில் உள்ள எல்லா தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை வருண பகவானுக்கு உண்டு என்று நம்பப்படுகிறது.
மேற்கு திசை மழைக்கும் செல்வ செழிப்புக்கும் தொடர்புடையது.
கிழக்கு:
பஞ்ச பூதங்களில் நெருப்பும், நிறங்களில் சிவப்பும், வடிவங்களில் முக்கோணமும் கிழக்கு திசைக்கு ஏற்றது. இன்றியமையாத சக்திகளுக்கெல்லாம் மூலாதாரமான சூரிய பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். எல்லா சக்திகளின் கடவுளான இந்திரனும் இங்கு ஆட்சி செய்கிறார்.
கிழக்கு திசை செல்வம், சந்தோஷம் மற்றும் புகழுடன் தொடர்புடையது.
மேலும் இது வாழ்கையை பேணி பாதுகாப்பும் வளமும் தரும் என்று நம்பப்படுகிறது.
கிழக்கு நோக்கி முக்கியமான வேலைகளை செய்தல் சூரிய பகவானின் அருளை பெற்று தரும். சாமி கும்பிடும் போதும், தியானம் செய்யும் போதும் கிழக்கு நோக்கி செய்ய வேண்டும். உறங்கும் பொது தலை கிழக்கு பக்கம் இருத்தல் நல்லது.
அமேசான் மழைக்காடுகள்.
இயற்கை அன்னையின் அதிசயங்களின் இரண்டாம் பாகத்தின் மூலம் நான் உங்களை கூட்டி செல்ல இருக்கும் இடம் தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசன் மழை காடுகளுக்கு....
அமேசான் நதி ஆற்றுபள்ளத்தாக்கு பூமியில் பெரிய மழைக்காடுகளின் தாயகமாக உள்ளது.
Amazonia எனஅழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பெரிய மழைக்காடு. உலகின் மிகப்பெரிய உயிரியல் ஆய்வு பிரதேசமாகவும் இது விளங்குகிறது. அமேசான் மழைக்காடுகள் அமேசான் நதியால் அப் பெயர் பெறுகிறது. பிரதான ஆறு 4080 மைல் நீண்டு உள்ளது. அதன் வடிகால் 2722000 மில்லியன் சதுர மைல்கள் உள்ளடக்குகிறது.
உலகின் நதி நீரின் பதினாறு சதவிகிதம் அமேசான் டெல்டாவழியாக பாய்கிறது. 28 பில்லியன் கேலன்கள் நீர் ஒவ்வொரு நிமிடத்துக்கும் அட்லாண்டிக் சமுத்திரத்துக்குள் பாய்கிறது.
கடல்கடந்து 100 க்கும் மேற்பட்ட மைல் வரைக்கும் கடலின் உப்புத்தன்மை செறிவை குறைக்கின்றது.
வெப்பமண்டல தாவரங்கள் மற்றும் விலங்குகளால் மூடப்பட்டிருக்கும் கடைசி பெரிய இடம் இன்றைய அமேசான்மழைக்காடுகள் தான் . ஒன்பது நாடுகள் முழுவதும் 5.5 மில்லியன் சதுரகிலோமீட்டர் மற்றும் பரவியிருக்கிறது.
பிரேசில், பொலிவியா, பெரு, ஈக்வடார்,கொலம்பியா, வெனிசுலா, கயானா, மற்றும் சூரினாம், அதே போல் பிரஞ்சுகயானா. (தென் அமெரிக்க கண்டத்தில் 40% உள்ளடக்குகிறது)
Amazonia ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 அடி மழை பெறுகிறது.ஜூன் மற்றும் டிசம்பர் இடையே, நீர் மட்டம் 30 முதல் 45 அடி உயர்கிறது.
சில 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அமேசான் நதி பசிபிக் பெருங்கடலில் மேற்கு நோக்கி பாய்ந்தது. தென் அமெரிக்க தகடு மற்றொரு டெக்டானிக் தட்டின் நகர்த்தப்படும் போது, ஆண்டிஸ் மலைகள் மெதுவாக உயர்ந்தன ஆகவே நதியின் ஓட்டம் தடுக்கப்பட்டது. ஆறு அமைப்பை மாற்றமடைந்தது நன்னீர் ஏரிகள் உருவாக்கப்பட்டது. அமேசான் சூழல் கடுமையாக மாற்றப்பட்டது. பிறகு ஆறு 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் நோக்கி கிழக்கு நோக்கிய அதன் வழி திறக்கபட்டதாக நம்பப்படுகிறது.
பழைய உலக கண்டுபிடிப்பாளர்கள் அமெரிக்காவை எட்டியது போதுஅவை அனைத்தும் தங்கம், வெள்ளி மற்றும் மணிக்கற்கள் பார்த்து இருந்தனர். தங்கத்தால் ஆன நகரம் இருப்பதாக நம்பப்பட்டதால் பல ஐரோப்பிய நாடுகள் இங்கு படையெடுத்தன..
இதற்கு மழைக்காடுகள் என்று புனைப்பெயர் இருந்தாலும் இங்கு வெப்ப மண்டல மற்றும் ஒப்புநிலை காடுகளும் உள்ளன. இங்கு அனைத்து நேரத்திலும் மழை இல்லை. வெப்பமண்டல மழைக்காடுகள் எப்போதும் நிலநடுக்கோட்டுக்கு அருகில்அமைந்துள்ளது, இவை மிகவும் சூடாக உள்ளன. ஆற்று நீரின் பெரும்பகுதிகள் இந்த வெப்ப காற்றில் ஆவியாக காடு முழுக்க பரவுகின்றது. காடு தங்களது கிளைகள், வேர்கள் மற்றும் மண் நீரை தேக்கி வைத்து கொள்ள உதவுகிறது. இது காட்டை மிகவும் ஈரப்பதான வைத்திருக்க உதவுகிறது. இதனாலேயே இதற்கு மழைக்காடுகள் என்ற புனை பெயர் உருவானது.. இங்கு ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட மழைக்காலம் இருக்கிறது.
இந்த வெப்பம், மழை மற்றும் ஈரப்பதம் இந்த காட்டை மிகவும் வளமானசுற்றுச்சூழல் அல்லது பல உயிரினங்கள் வாழும் ஒரு வாழ்விடமாக உருவாக்குகின்றன.
இந்த மழைக்காடுகள் மற்ற காடு போல், மரங்கள் கொண்டிருக்கிறது,ஆனால் அவை நீங்கள் ஐக்கிய அமெரிக்க, ஐரோப்பா மற்றும் ஆசியாபகுதி போன்ற குளிர்ந்த இடங்களில் பார்த்த மிதமான காட்டிலிருந்து மிகவும்வித்தியாசமாக இருக்கிறது. 120 அடி மரங்கள், செடிகள் ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்கள் , மற்றும் சிவப்பு கண் மரம் தவளை,பூச்சிகள், பறவைகள், ஊர்வன, நிலநீர் வாழ்வன மற்றும் பாலூட்டிகள்உட்பட மழைக்காடுகள் விலங்குகளின் அனைத்து வகையான அங்குஉள்ளன. இந்த மழைக்காடுகள் விலங்கு இனங்கள் ஆயிரக்கணக்கானவற்றின் தாயகமாக உள்ளது. 500 பாலூட்டிகள், 175 பல்லிகளிலும் மற்றும் 300 க்கும் மேற்பட்ட ஊர்வனஇனங்கள், மற்றும் உலகின் பறவைகளின் மூன்றில் ஒரு பங்கு Amazonia இல் வாழ்கின்றன. இது 30 மில்லியன் பற்றி பூச்சி வகைகள் இங்கேகாணலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கே உயிர் பன்முகத்தன்மை அனுபவம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உள்ளது.
அதன்தாவரங்களால் தொடர்ந்து ஆக்ஸிஜன் கார்பன் டை ஆக்சைடு மீள் சுழற்சியில் ஈடுபடுகின்றது ஏனெனில், இது "நம் பூமியின் நுரையீரல்" என விவரிக்கப்படுகிறது. பூமியின் ஆக்ஸிஜன் சுமார் 20% அமேசன் மழைக்காடுகள் தயாரிக்கிறார். 90-140 பில்லியன்மெட்ரிக் டன் கார்பனை ஸ்திரப்படுத்தி இந்த பூமிக்கே வாழ்கை அழிகிறது.
அமேசன் மழைக்காடுகள் நான்கு அடுக்குகள் அல்லது சமூகங்கள்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அடுக்கு தனிப்பட்ட சுற்றுச்சூழல்,தாவரங்கள், மற்றும் அந்த அமைப்பை தழுவி விலங்குகளைகொண்டிருக்கிறது.
ஓர் ஆண்டின் மழைபொழிவு – 27 மி.மீ.
பல ஆயிரக்கணக்கான மரங்கள் – 40 மீட்டர் உயரத்தை தாண்டி வளர்ந்துள்ளன.
கோகோ,பைன்னாப்பிள்,ரப்பர், நட்ஸ் – விளையும் முக்கியப் பயிர்கள்.
250 வகையான மரங்களின் வகைகள்..
1500 வகையான பறவைகளின் வகைகள்
3000 வகையான மீன் இனங்கள்.
30 மில்லியன் பூச்சி இனங்கள்.
அதிசயங்கள் பொதிந்த ஓர் கனவுக் காடு தான் அமேசான் என்றால் அது மிகையல்ல!!!!!!!!!!!!!!!!!
முருகன் கோவில் - மலேசியா
உலகின் மிகப்பெரிய முருகன் சிலை:
மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தலவரலாறு:
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.
இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
கோயில் அமைப்பு:
இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
மிகப் பெரிய முருகன் சிலை:
தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
சிறப்பு விழாக்கள்:
முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது. ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
சிறப்புக்கள்:
மலாய்க்காரர்கள் எனப்படும் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை என்றாலும் இக்கோவிலையும், இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிலையையும் சுற்றுலாவாக வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.
பயண வசதிகள்:
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.
மனித உடல்.
·
மனிதன் உயிரிழந்த பின்பும்
அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - 20 நிமிடங்கள்
சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர்
மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர்,
மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர்
மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000
மனிதனின் கைரேகையைப் போலவே
நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடு
மனிதன் உயிரிழந்த பின்பும்
அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - 20 நிமிடங்கள்
சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர்
மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர்,
மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர்
மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000
மனிதனின் கைரேகையைப் போலவே
நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடு
தேனீக்கள்..!
தேன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்! எகிப்தில், பிரமிடுகளைத் தோண்டியபோது, ஒரு தேன் ஜாடி கண்டெடுக்கப்பட்டது. அது 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆனாலும் அது இன்னும் நல்ல நிலையில் இருக்கிறது!
சின்னஞ்சிறு தேனீயினால் ஓரிடத்திலும் நிற்காமல், தொடர்ச்சியாக 11 கி.மீ.தூரம் பறக்க முடியும்! அது பறக்கும்போது, ஒரு நிமிடத்துக்கு 26,400 தடவைகள் தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளுகிறது.
தேனீக்கள், பூக்களை நோக்கிப் பறக்கும்போது ஒரே நேர்கோட்டில் பறக்கின்றன. ஒரே நேர்க்கோட்டில் செல்லும் சூரியனின் கதிர்களை உணரக்கூடிய சக்தி தேனீக்களுக்கு உண்டு. இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் ‘கார்ல்வான் ஃபிரிஸ்ச்’ என்ற விஞ்ஞானி.
தேனீக்கள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பறக்கின்றன. இதே வேகத்தில் அது பறந்தால் 25 நாட்களில் உலகத்தையே ஒரு சுற்று சுற்றிவிடும்!
தேனீக்கள் எந்த நேரத்திலும் தூங்குவதேயில்லை! இரவானாலும் சரி; பகலானாலும் சரி!
ஒரு ராணித் தேனீ தினமும் சராசரியாக 2500 முட்டைகள் இடக்கூடியது! இது, ஒரு கோழி தினமும் 50 முட்டைகள் இடுவதற்குச் சமம்!
தன் கொடுக்கினால் கொட்டிய தேனீ கொடுக்கை இழந்து விடும். அதனால் அந்தத் தேனீ விரைவில் இறந்துவிடும்!
தேனீக்களின் ஆயுட்காலம் சுமார் 2 மாதங்கள். ராணித் தேனீயின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள்!
நாக்கினாலும், உணர்கொம்பினாலும், கால்களாலும்கூட தேனியினால் ருசிபார்க்க முடியும்!
தேனடைகள் கட்டப் பயன்படும் மெழுகு, தேனீக்களின் உடலிலேயே சுரக்கிறது!
ஒரு தேனீ 1 கிலோ எடையுள்ள தேனைச் சேகரிக்க வேண்டுமானால் அது 50 லட்சம் பூக்களில் அமர வேண்டும்! இதற்காக 1.5 லட்சம் தடவைகள் அது பறந்து போக வேண்டும்!
ஒரு தேனீ, பகல் முழுவதும் வெளியில் பறந்து சென்று விட்டுத் தன்னுடைய கூட்டுக்குத் திரும்பும்போது அதனிடம் சுமார் 40 மி.கிராம் தேன் இருக்கும். இது, தேனீயின் எடையில் பாதி!
தேனீயின் கண்கள் மிகவும் விசித்திரமானவை. புதிதாக மலர்ந்த மலர்களை மட்டுமே அதன் கண்கள் பார்க்கின்றன. வாடிய மலர்களை அல்லது மலராத மொட்டுக்களை அதனால் பார்க்க முடியாது!
தேனீக்கு மிக நுண்ணிய 5000 மூக்குத் துளைகள் இருக்கின்றன. 750 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு பூவின் மணத்தைக் கூட அதனால் நுகர முடியும்!
ஒரு தடவை, தேனீக்கள் போதிய அளவு இல்லாததால் மகரந்த சேர்க்கை குறைந்து, அதனால் பழ உற்பத்தியும் குறைந்து விட்டது என்று ஜப்பான், தேனீக்களை லண்டனிலிருந்து வரவழைத்துத் தன் நாட்டில் பறக்க விட்டது! அதன்பிறகு, ஜப்பானில் பழ உற்பத்தி அமோகமாக இருந்தது!
தேன் தித்திக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்! ஆனால், மலேசியாவில் கிடைக்கும் தேன் கசக்கும்! அங்கே அதிகம் வளரும் ரப்பர் மரங்களின் பூக்கள் கசப்பானவை. அதனால் அந்தப் பூக்களிலிருந்து கிடைக்கும் தேனும் கசக்கும்!
தேனீ விஷத்தைக் கொண்டு, சரும வியாதிகள், கீல்வாத ஜுரம், நரம்பு அழற்சி முதலிய வியாதிகளைக் குணப்படுத்துகிறார்கள். தேனீ விஷத்தில், மாக்னீஷியம் ஃபாஸ்பேட், கந்தகம் ஆகியவை இருக்கின்றன!
தேன் மிக விரைவில் ஜீரணமாகி, அதன் சத்துப் பொருள்கள் இரத்தத்துடன் கலக்கின்றன. 1 கிலோ தேன், 65 கோழி முட்டைகளுக்குச் சமம்; 10 லிட்டர் பாலுக்குச் சமம்; 8 கிலோ பிளம் பழத்துக்குச் சமம்; 10 கிலோ பச்சைப் பட்டாணிக்குச் சமம்; 20 கிலோ காரட்டுக்குச் சமம்!
புயல் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய சக்தி தேனீக்களுக்கு உண்டு. புயல் வரப்போவதை அறிந்துகொண்டு, தேனீக்கள் கூட்டுக்குத் திரும்பி வந்து விடுகின்றன!
தேனீக்களுக்கு வியாதி வந்தால் மருந்து கொடுத்து குணப்படுத்திவிட முடியும் என்று சோவியத் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்!
தேன்கூட்டில் தேனீக்கு ஏதாவது வியாதி ஏற்பட்டால், அது தானாகவே வேறு இடத்துக்குச் சென்று இறந்து விடும்! அப்படிப் போகாவிட்டால், மற்ற தேனீக்கள் அதை உடனடியாகக் கொன்று அப்புறப்படுத்திவிடும்!
Wednesday, February 1, 2012
Google நாம் அதிகமாக பயன்படுத்தும் தேடுதல் இயந்திரம். இதில் நாம் தேடும்போது நமக்கு தேவை இல்லாத பல விசயங்களும் வர வாய்ப்பு உள்ளது. இதை தவிர்த்து எப்படி நமக்கு தேவையானதை மட்டும் தேடுவது எப்படி என பார்ப்போம் வாருங்கள்.
நான் கொடுக்கும் டிப்ஸ்களை பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் சொல்லுங்கள்.
1.Use Of '+' sign:
இந்த + Sign ஐ பயன்படுத்துவதால் நாம் ஒரு சொற்றொடரை தரும்போது அதில் எந்த வார்த்தைக்கு முன் + ஐ தருகிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் தேடுதலில் கிடைக்கும்.
உதாரணம்: Reviews of +DELL and ACER
இதில் உங்களுக்கு ரிசல்ட் Reviews அல்லது ACER உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக DELL இடம்பெறும்.
2. Use Of '-' sign:
இது மேலே உள்ள +signக்கு எதிரான வேலையை செய்யும். அதாவது - sign உள்ள வார்த்தை உங்கள் தேடலில் இடம்பெறாது.
3. Use Of '~' sign:
இந்த sign ஐ ஒரு வார்த்தைக்கு முன் சேர்த்தால் அதன் இணை பொருட்சொல்லையும்(synonyms) தரும்.
4. Search a particular site:
ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவலை தேட விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம்.
Search: site:www.xyz.com abc
உதாரணம்: site:baleprabu.blogspot.com/ computer tricks
5. Define a word:
ஒரு சொல்லின் பொருள்(Definition) அறிய இந்த முறையை பயன்படுத்தவும்.
Search: define:abc
உதாரணம் : Search: define:Computer
6. Search for exact phrase:
ஒரு சொற்றொடரை தேட இது உதவும்.
Search: "contact us"
7. Using the wild card '*':
இது ஒரு சொல்லின் முழுதான வார்த்தை தெரியவில்லை என்றால் பயன்படுத்தவும்.
Search: friend*
இப்போது உங்களுக்கு friend, friends, friendship போன்ற வார்த்தைகளை தேடிதாரும்.
8. Using the '?' sign:
ஒரு வார்த்தைக்கு முழு spelling தெரியாத போது பயன்படுத்தலாம்.
Search: :fri??d
இப்போது உங்களுக்கு மேலே உள்ள spelling உடன் தொடர்பு உடைய வார்த்தைகளை காட்டும்.
9. Use of boolean operators :
AND,OR,NOT இவைதான் boolean operators. இவற்றை இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் சேர்ப்பதால் அந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு link இல் தரும்.
உதாரணம் :
Search: swim OR float
இங்கு AND,OR,NOT போன்றவற்றை Capital letter ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)